Monday, June 7, 2010

மூன்றாவது அணி

நம்மை சுற்றியுள்ள இயற்கை, நம்மை எப்பொழுதும் வியக்க வைத்துக்  கொண்டே இருக்கிறது. இயற்கை என்பது, கோடான கோடி வருடங்களாக, பரினாம  வளர்ச்சியின் கோட்பாடுகளுக்கு இணங்கவே இருந்துள்ளது. நாம் வாழும் உலகமானது ஒவ்வரு முக்கிய அல்லது வீரிய கட்டத்தில் அழிந்தும், உருவாகியும் , பல அறிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது . மனிதன் , இந்த படர்ந்த பூமியில் நடமாடிய  காலம் முதல் , மனிதனுக்கே உண்டான பல பரினாம  வளர்ச்சியை நாம் அறிவோம். எடுத்துக்கட்டாக    , மனிதன், மித்தப்  பாலூட்டிகள் போல் , முக்கியமாக குருங்கினை போல் நாலு கால்களால் நடந்தான், பிறகு இரண்டு கால்களால் , அக்குருங்கினை போல் குனிந்தே நடந்தான். இறுதியாக ,நேராக நிமிர்ந்து நடக்கப்  பழகி கொண்டான், இதுவே பரினாம வளர்ச்சியின் ஒரு சான்று.


நமது இயற்கையின் இப்படிப்பட்ட விந்தையான செயலைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப்  போகிறோம். ஆண், பெண் , குறி, சேர்க்கை, இச்சை, காமம், காதல் போன்றவை   நாம் தினந்தோறும்  கேட்க்கும் சராசரியான சொற்கள். ஆண் என்பவன், திடமானவன், வீரன்,  உழைப்பாளி, ஆளும் திறன் கொண்டவன், முதன்மைக்குரியவன்  , என்றெல்லாம் நம் முன்னோர்கள் வகுத்த வைத்த இலகணங்கள். இப்படியாக கூறப்பட்ட ஆணுக்கு, நேர் எதிராக , பெண் என்பவள் மென்மை, அழகு, வசீகரம், சாந்தம், பொறுப்பு, பேணுதல் போன்றவற்றை கொண்டவள் என அர்த்தம் கொன்றனர்.


சரி இவ்விரு அணிகளுக்கும் உண்டான இலக்கணங்களை பார்த்தாகி விட்டது. இதற்கு அப்பால், இயற்கையின் பரிணாம வளர்ச்சியால் உண்டான மூன்றாவது அணியும் உள்ளது. நான் இனிமேல் , இக்கட்டுரையில் யாரைக்  குறிப்பிட்டு விளக்கப் போகிறேன் என்று நீங்கள் ஊகித்து இருப்பீர்கள் . அது தான் இல்லை , நீங்கள் நினைத்தவாறு நான் " மூன்றாவது அணி" என கூற முற்பட்டது "திருநங்கைகள்" பற்றி அல்ல.  உங்கள் வியப்பிற்கு , இதோ தக்க விளக்கங்கள்.


அந்த மூன்றாவது அணி , சற்றே வியப்பானது தான்   ஆங்கிலத்தில்  இதற்கு " THIRD SEX"  என்று சொல்வார்கள். இது இயற்கையின் பரிசோ , இல்லை சாபமோ , இவர்கள் சற்று தன்னிச்சையாகவே உள்ளனர். பிறப்பினால் ஆணாகவும் , தேக தோற்றத்தில் பெண்ணாகவும் , அல்லது இதற்கு நேர் மாறாகவும்  ( VICE VERSA) இருப்பர். சரி திருநங்கைகளுக்கும் , இம்மூன்றாம் அணிக்கும் என்ன மாதிரியான வேறுபாடுகள் இருக்கப்   போகிறது என்று நீங்கள் கேட்கலாம். இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் , அடுத்து வர போகிற சிறிய பத்தியைக்  கடந்து , அடுத்த பத்தியைப்  படிக்க முற்படவும். 






திருநங்கைகள் என்பவர்கள் , பிறப்பால் ஆணாகப்  பிறந்து, ஆண்களுக்கேயான பிறப்பு உறுப்புகளோடு இருந்து , பெண்களுக்குகான குணங்கள்  கொண்டவர்களாகவோ, அல்லது நேர்மாறகவோ  இருப்பர். தங்கள் உடலில் உள்ள உறுப்புகளுக்கு முக்கியத்துவம் காட்டாமல் , எதிர்பாலர்களுக்கான உணர்சிகளுக்கு மட்டும் பீரிட்டு வெளிவரும்.திருநங்கைகளில் ஆணும் , பெண்ணும் உண்டு. ஆணாகிய திருநங்கைகள் , தம்மை பெண்ணாக பாவித்துக் கொண்டு , பெண் வேடமிட்டும் , பெண்போன்று  சேஷ்டைகள் செய்தும் வாழ்கையை மேற்கொள்வர். இவர்கள் , நமது சமுதாயத்தில் போற்றியும், தூற்றியும் ஆங்காங்கே வாழ்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் தெய்வீக சக்தி கொண்டவர்கள் என கருதப்படுகிறார்கள்.


மூன்றாவது அணியான இந்த இனம் , பெண்ணும் அல்லாது, ஆணும் அல்லாது , ஒரு வகையான அறிய இனம். இவர்கள் இயற்கையால் உருவாக்கப்பட்டு பேணி பராமரிக்கப்  படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மிகவும், ரகசியமாகவே வாழ்ந்து வருகின்றனர். மருத்துவரீதியாக விளக்கம் கூறினால், பிறப்பால் உயிர் அணுவின் ஆக்கத்தில் ஆணாகவும் ,   பிறந்த பின் , பெண் உருப்புகளோடும் , அல்லது நேர்மாரகவும், அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட கலவையில் இருப்பர். இவர்களால் நம்மை போன்று குடும்ப வாழ்கையில் ஈடுபட்டு , குழந்தை பேரு காண முடியும். கடந்த சில நூற்றாண்டுகளாக , மருத்துவ குறிப்பேடுகளில் , இவ்வாறு கூறப்படும் மூன்றாவது அணி பிறத்தலும், பிறந்தவுடன் இறத்தலும், இவ்வாறு பிறந்தவுடன் , சில பல அறுவை சிகிச்சைகள் செய்து , தம் ஆசைக்கு  இணங்க , தம்மை இனம் மாற்றியும்  கொள்கின்றனர்.   


இந்த இயற்கையின் திருவிளையாடல், மனிதர்களுக்கு மட்டும் அல்ல, நம்மைப்  போன்று பிற பாலூட்டிகளுக்கும் தகும். சிவப்பு மான்( RED DEER  -2  ஆண், 1 பெண்) ,  ப்ளைன் பின் மீன் ( PLAIN FIN - 1  பெண், 3 ஆண்) , பறவைகளில்  குருவி இனம் கூட, இப்படி பட்ட பாகுபாடுகள் காணப்படுகின்றன. நூற்றுக்கும்  மேற்பட்ட மிருகங்களிடையே காணப்படுகிறது . இயற்கையின்  இந்த பரிணாம வளர்ச்சியை பற்றி ஆராயும் அறிஞர்கள் கூட இச்செய்தியை வியப்பாக கருதுகின்றனர்.




இப்படிபட்ட மகத்துவமான இனத்தினை ,நம் இந்திய வரலாற்றில் கூட முக்கிய இடம் வகுக்கின்றன. நம் நாட்டிலுள்ள பழமையான  மதங்களான இந்து, இஸ்லாம், ஜெயின்,  போன்றவற்றில் கூட, மூன்றாவது அணி பற்றி குறிபிடப்பட்டுள்ளது. இன்னும் துல்லியமாக கூறவேண்டும் என்றால் , 3500 வருடத்திற்கு முன்பே , சில குறிப் பேடுகளில் உள்ளது என வரலாற்றுச்  சான்றுகள் உள்ளது. இது போதாது என, நாம் நாட்டின் வரலாற்று காப்பியங்களான, மகாபாரத்திலும், இராமாயணத்திலும் கூட சுட்டி காட்டப்படுகிறது . புத்த மதத்தின் குருவான, புத்தரே தம் போதங்களையும் , வாழ்க்கை நெறிகளையும் வாய்வழியாக , இந்த மூன்றாவது அணிக்கு சொன்னார் என வரலாறு கூறுகிறது. உலகத்தின்   மற்ற பகுதிகளான, எகிப்பது , சைபீரியா, அமெரிக்க, பாகிஸ்தான், தாய்லாந்த், போன்ற இடங்களிலுள்ள வரலற்று குறிபேடுகள் , மூன்றாவது அணி பற்றி தெளிவாக கூறகிறது. 






நம் இன்றைய புதிய இந்தியாவில் , மூன்றாவது அணியின் மேம்பாட்டிற்காக சில  நிறுவனங்கள் போராடி வருகின்றன. இதில் முதல்மையானவை , " ஹிர்ஜா" என்ற அமைப்பு , இந்த அமைப்பு ,மூன்றாவது அணியின் உரிமைக்காகவும் , தேவைகளுக்காகவும் , அமைக்கப்பட்டு ,செயல்பட்டு வருகிறது. நம் இந்திய அரசாங்கமே , இவர்களுக்கு  பல சலுகைகளை ஒதுக்கி உள்ளது . எடுத்துக்காட்டாக , நம் நாட்டின் பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வோட்டு அட்டை போன்றவற்றில் கூட இவர்களின் பால் , "பிற" என குறிபிடப்பட்டுள்ளது.  


இப்படிப்பட்ட மனிதர்கள் , சில தருணங்களில் போற்றியும் , தூற்றியும் , வணங்கியும்  , ஒதுக்கியும் வருகிறது ,நமது சமுதாயம். இயற்கையின் படைப்பால் இப்படி  பிறப்பதற்கு, இவர்கள் ஏன் பொறுப்பு ஏற்க வேண்டும்.


Sources: http://en.wikipedia.org/wiki/Third_gender

Monday, February 22, 2010

என்று தணியும் இவள் தாகம்

அங்கும் இங்குமாய் ஓரிரு முள்வார்த்தைகள் வீசினாய்
இன்று முள்வேலியிட்டு புண்படுத்துகிறாய்,
என்ன கிட்டுகிறது உனக்கு
எதை ஈட்டித்தந்தாய் எனக்கு,
இப்படி கேள்விகள் பல எழுகின்றன
பதில்கள் தழுவுகிறது எனது இதயம்,
என்று இதற்கு உதயம்.
அதுவரை பேனா முட்களையும் செல்போனையும் வடிகாலாய் கொண்டு
நிர ப்புகிறேன் நம் வாழ்க்கை புத்தகத்தின் தாள்களை.

மின்னல் சிரிப்பு கண்டு- இன்ப
மழை வரும் என்று - இல்லம்
புகுந்தேன்: இடி வார்த்தைகள்
தொடர- வாராமல் போனது
மழை: இடி அடங்க அர்ஜுனன்
முழக்கம்- வார்த்தை ஓய நான்
என்ன முழங்க : சொல்லிவிடு - வந்து
விடட்டும் இன்ப மழை

கவிதை விதைத்துவிட்டு-
காத்திருந்தால் போதுமோ.
வாழ்க்கை(பயிரிட) மகசூல் பெருகிடுமோ?
காதல் நீர் பாய்ச்சி
பிள்ளைகள் களை எடுத்து
விட்டுகொடுதலை, அனுசரணை
உரமிட்டு/ உரமாக்கி -
வாழ்க்கை விளை நிலத்தில் ஏதோ முன்
வேர்கள் இன்றி பயிரிட்டு - கவிதை
சூத்திரமோ தங்கு தடை இன்றி
விடை பெற்றிட: பிள்ளையார்சுழி
மட்டும் போட பரீட்சைத் தாள்
அல்ல - வாழ்க்கைத் தாள்.

கவிதை என்றாய்- கதையாகி விட்டாய்

கவிதை தொடக்கம்: காதல் பயணம்- கதை சுருக்கம்

காதலர்களின் பிள்ளையார்சுழி?-
பல்லாயிரம் கவிஞர்கள்
உருவாகிய அச்சு? - I Love You.

These lines are specially dedicated to me by my lovable wife,Priyaa M

Sunday, February 7, 2010

நடுமுதலைக்குளம்

ஒரு அழகிய வெள்ளி குவளையில் மஞ்சள் நிற சர்க்கரை பாகில், உப்பென வெடைத்திருக்கும் 'ரசமலாய்' போல, அகண்ட விரிந்த விண்வெளியில், வெண்ணிறம் பாதியும், பொன் நிறம் பாதியும் கொண்டு, அனுதினமும் ஆதவன் காதலிக்கும் "நிலவு" , தன் மேல் விழுந்த ஒளிக் கதிர்களை பூமியின் மேல் பொழிந்து கொண்டிருந்தது .கால தேவனின் கணக்குப்படி , அது அந்தி வரும் நேரம். மருதைக்கும் தேனிக்கும் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஜப்பானிய நிறுவனத்தின் நாலு சக்கர ஊர்தியானது, தன இஷ்டத்திற்கு உருண்டு ஓடியது.

அந்த ஊர்தியின் உள்ளே , ஒரு பலத்த குரல் கேட்டது, அது மிகவும் எச்சரிக்கையாகவும் இருந்தது. " நான் சொன்னா தயவு செய்து கேள், இந்த ஊர்தியை ஓட்டுவது என்றால் அது அவ்வளவு சுலபம் அல்ல , மிகவும் ஆபத்தும், கடினமானதும் கூட" என்று முத்துபாண்டி தன் துணைவியாளிடம் கூறலானான். அவனது அந்த கூற்று சற்றே பொருத்தமானதாகவும் இருந்துதது , ஏனெனில் அவனுடைய மனைவி சங்கரி இந்த ஊர்தியில் இரண்டாம் முறை பயணிக்கலானாள். தன் அன்பான மனைவி மிகவும் மன்றாடி கேட்டுக்கொண்டதால் முத்துபாண்டியால் மறுக்க முடியவில்லை, சரி ஆனது ஆகட்டும் எது நேர்ந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தன் உள்மனதோடு சமாதானம் செய்து கொண்டான். அந்த ஊர்தி மருதையை தாண்டி சுமார் முற்பது மைல் கல் தூரம் தாண்டி இருக்கும் வேளையில் "நடுமுதலைக்குளம் உங்களை அன்போடு வரவேற்கிறது" என்ற அறிவிப்பு பலகை , தன் பல்லை இளித்துக் கொண்டிருந்தது . " அப்பா அது என்ன பேரு, நடுமுதலைக்குளம் , அதற்க்கு என்ன அர்த்தம்" என்று தன் அப்பாவிடம் கேட்டாள், ஐந்து வயதான பாண்டியின் மகள் அனிதா. அது ஒன்றும் இல்லையம்மா, முதலைகள் நிறைந்த குளம் என்றும், நீண்ட ஆயுட்களை கொண்ட சான்றோர் வாழும் இடம் என்றும் பாண்டி விளக்கினான்.

சற்றே தாமதமாக முன்னேறிய ஊர்தி, திடீரென விரைவு படலத்திற்கு மாற்றலானது. சங்கரியும் எதிரே பளீரென வெளிப்பட்ட பலவகை ஊர்தியின் ஒளிகலால் ஓட்ட முயன்று சிறிது பதற்றாமானாள். ஏனோ தெரியவில்லை அன்று வானம் சற்று மிகவும் பளிச்செனவே இருந்தது. நடுமுதலைக்குளம் கிராமத்தை ஊடுருவி சென்றது அந்த ஊர்தி. நேரத்துக்கு வீட்டுக்கு போய் சேர வேண்டும் என , பாண்டியின் தந்தை சொல்,கோயில் மணியென சிலீர் சிலீரென பாண்டியின் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ததினாலும் ,மிக்க அசதிக்கு உள்ளாகிய அனிதா அறவே உறங்கி விட்டாள். சிறுமி என்றதால் என்னவோ ,அவள் ஊர்தியின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு , இருக்கை காப்பான் கூட அணியாமல் கண்ணயர்ந்தாள்.அந்த கிராமத்தின் காவல் தெய்வமான முனியாண்டி கோவிலை தாண்டிய அரை மைல்கல் தூரத்தில்,சற்றும் எதிபாராத விதமாக பாண்டியின் உள்நாக்கில் நன்கு ஊறவைத்த புளியையும் பூண்டையும் ஒன்றாக அரைத்த கலவை போன்று ஒன்று அவன் பற்களில் படர்வது உணரலானான். அடுத்த விநாடி அவன் காதுகள் தன் அன்றாட செயல்களை இழக்க துவங்கியது. ஏனோ தன் மனைவியின் கூக்குரலும், கரை புரண்டோடும் ஊர்தியின் இரைச்சலும் அவனுக்கு கேட்கவே இல்லை. மாற்றாக அவன் அது வரை கேட்டிராத ஒரு ஒலி ,கழுதைப் புலியின் பற்களை போன்ற கூர்மையான அந்த ஒலி,அவன் காதை கிழித்தது.அது மிகவும் தொடர்ச்சியாகவும்,கேட்பதற்கு கடுமையாகவும், சிறு மூளையை இரண்டாக பிளக்கும் அளவுக்கு இருந்தது.

"என்னங்க,ஒன்றும் பேசாமல் உள்ளீர்,என்னவாயிற்று உங்களுக்கு" என்றவாறே கேள்விகளை மென்மேலும் பதற்றத்துடன் அடுக்கினாள். பத்து நிமிடங்கள், பத்து படபடப்பான நிமிடங்கள், பாண்டிக்கு எதோ முப்பத்து முக்கோடி உலகங்களையும் தாண்டி சென்று விட்டதாக ஒரு பிரமை. தன் சுயநினைவை எட்டியதற்கு சான்றாக ஓவென அலறினான். இதை அதிர்ச்சியுற கண்ட சங்கரி, ஊர்தியின் கடிவாளத்தை இயக்க மறந்து, ஊர்தியின் மொத்த கட்டுபாட்டையும் இழக்க நேர்ந்தாள், அதுவே அவள் கடைசியாக உள்வாங்கிய காற்றாக அமைந்தது.
இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு, இதே தேசிய நெடுஞ்சாலையில் , சுமார் இதே நேர கட்டத்தில், அதே ஜப்பானிய நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனம் போய் கொண்டிருந்தது. அந்த வாகனம் சரியாக அந்த ஊர் முனியாண்டி கோவிலை தாண்டிய பத்து மைல் கல் தூரத்தில், ஒரு ஆடு மேய்க்கும் சிறுமி தன் கிடையைச் சேர்ந்த ஆடுகளோடு , அந்த நெடுந்த சாலையை கடக்க முயன்றாள். அவ்வாறு கடக்க முயன்ற போது , அவள் கையின் அகப்பில் இருந்த பச்சிளம் ஆட்டுக்குட்டி , தன் பின்னங்காலுக்கு பிடரி மற்றும் அல்ல, தாவிக் குதித்தோட தெம்பும் வந்து விட்டது என எண்ணி துள்ளி குதித்தது. அப்பொழுது சாலையில் சரமாரியாக வந்த முத்துபாண்டியின் வாகனத்தின் முன் சக்கரங்களின் இடையே சிக்கி, ரத்த நாணங்கள் பீரிட்டு , தலை சிதறி, மூளையானது அச்சக்கரத்தின் மேல் ஒரு படிமாக ஒட்டி கொள்ள , அந்த சம்பவம் ஒரே களேபரம் ஆகியது.

சிறிதளவும் தன் வாழ்வில் இப்படி ஒரு கோரக்காட்சியை கண்டிராத அந்த சிறுமி, கண்கள் உள்வாங்கி மயங்கி விழுந்தாள். பொதுவாக இந்த சம்பவத்தை ஆராய்ந்தால், இதில் தவறு யாரிடமும் இல்லை. ஆனால் தன் வாழ்வில் ஒரு தரம்தாழ்ந்த செயலை இனிமேலும் செய்திராத வகையில், பாண்டி முயல எத்தனித்தான். தன் வாகனத்தில் வைத்திருந்த குவளை நீரை எடுத்து வாகனத்தின் முற்பகுதியை சுத்தம் செய்யலானான். இச்சம்பவம் நடந்த இடம் அந்த கிராமத்தை விட்டு தள்ளி உள்ளதால் , அருகில் ஜன நடமாட்டம் சிறிது குறைவே. தன் வாகனத்தை கழுவ நேரிட்ட பாண்டிக்கு , அந்த சிறுமி மயங்கி விழுந்ததை கவனிக்கவில்லை, மாறாக தன் புத்தம் புது வாகனம், எடுத்து வந்த முதல் நாளே ரத்தப்படலமாகி போனேதே என்று அவனுக்கு கோபமும் சீற்றமும். அவன் வாகனத்தில் மேல் விழுந்த சிறு சிறு நீர்த்துளிகள் , அந்த சிறுமியின் மேல் விழ, அவள் கண்கள் மெல்ல திறந்து. அவள் வளர்த்த ஆட்டுக்குட்டியின் இரங்கலை சிறிதும் எதிர்பாராத அவள், கதறிக்கதறி அழுவதற்குப் பதிலாக , சோழ நாட்டுச்சிற்பம் போல நின்று கொண்டிருந்தாள். மௌனத்தின் விளிம்பில் ஒரு ஜடம் போல காட்சி அளித்தாள். அவள் செல்லமாக வளர்த்த மூன்றே நாளன ஆட்டுக்குட்டி இறக்க நேர்ந்ததை அவளால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.

அந்த சிறுமியின் அதீத மாற்றத்தை , சிறிதும் அறிந்திராத பாண்டி, நேராக அந்த சிறுமியைப் பார்த்து , கடும் சொற்களால் சரமாரியாக கடிந்தான். மிகவும் தகாத வார்த்தைகளால் அந்த சிறுமியைச் சாடினான். முடிவாக அவன் அந்த சிறுமியை எச்சரித்தான், " அடுத்த தடவை நீ இப்படி வருவாயானால், உனக்கும் இதே கதி தான், உன் மூளையும் சிதறி விடும் என்று, அகவை அறியாது மூர்க்கமாகச் சாடினான். அந்த கோரக்கொலையை தாண்டி, பாண்டி கடிந்ததையும் தாண்டி , ஏனோ எதையும் கேட்டு கொள்ளாதவாறு , தன் வீட்டை நோக்கி பயண முற்பட்டாள். அந்த சிறுமி சகஜமான நிலையில் இருந்து , ஆழ்மனநிலை மையத்தை அடையலானால். இந்த நிலையை வேறு யாரேனும் மேற்கொண்டால், மீண்டும் பழைய நிலையை அடைய ஒரு சில நிமிடங்களோ, இல்லை நொடிகளோ போதும் , ஆனால் அந்த சிறுமி மீண்டும் தன் இயல்பு நிலையை இறுதி வரைக்கும் அடையவே இல்லை. ஏனெனில் அந்த துக்க நிகழிச்சியை மீள முடியாமல் , ஊன் உறக்கமின்றி , உடல் காய்ச்சலாகி , பேச முடியாமல், இரண்டு நாளில் இறக்கவும் நேரிட்டாள். அந்த சிறுமியின் மரணம் பலருக்கும் கேள்விகளை எழுப்பியது. உண்மையில் பாண்டியின் நோக்கமில்லாத அந்த கொலை மற்றும் அவன் சாடிய கடுஞ்சொற்கள் , இவை இரண்டும் தான் அந்த சிறுமி மரணத்தைத் தழுவ நேரிட்டது.

பத்து நிமிடங்களுக்கு பிறகு, தன் இயல்பு நிலையை அடைந்த பாண்டி, சங்கரியின் வாகன கட்டுபாடின்மையை பார்த்து அதிர்சிச்சயுற்றான். " சங்கரி பிரேக் போடு , பிரேக் போடு" என்று கதறலானான். ஏனனெனில் தன் கணவனின் பேச்சை சுமார் பத்து நிமிடங்கள் கேட்க முடியாது போனதால் பதற்றமுற்றாள் சங்கரி. அதன் காராணமாக , எதிரே வந்து கொண்டிருந்த நீர் இறைக்கும் லாரி மீது நேருக்கு நேர் மோத முற்பட்டாள். பாண்டியோ தன் நினைவுக்கு வந்த நொடியில், எதிரே வந்த லாரி மீது மோதி, இறுதியில் வானகம் சிதைந்தது, அவன் குடும்பமும் சிதைந்தது.

சரி இப்பொழுது நாம் இரண்டு கோரச்சம்பவங்களை பார்க்க நேர்ந்தோம். இவ்விரு சம்பவங்களுக்கு இடையே என்ன ஒரு ஒற்றுமை என்று பார்த்தல், அது மிகவும் மிரளவைக்கும் விஷயமாக உள்ளது. இதற்க்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் ஒன்று உள்ளது . அதாவது இந்த பூவுலகையும் , பூதவுடலையும் விட்டு துர்பாக்கியமாகப் பிரிந்த சென்ற ஆத்மாக்கள் , தாம் விட்டுச்சென்ற நினைவுகளையோ அல்லது நபர்களையோ மீண்டும் உறவாட வேண்டும் என்று ஆசை படும். இப்படி அலையும் ஆத்மாக்களுக்கு, எப்படி அது சாத்தியம் என்று கூர்ந்து கவனித்தால், பஞ்சபூதங்களே பதில். அதில் முதலோங்கி இருப்பது ஒலி. ஆங்கிலத்தில் இதற்கு "White noice" என்று பொருள் படும். இப்படி தானோங்கி திரியும் ஆத்மாகளிடம் தொடர்பு கொள்ள மனிதன் கண்டுபிடித்து தான் இந்த "White noice" அணுகுமுறை.

இந்த "White noice" என்பது , ஏதும் நுட்பமான கணக்கோ, இல்லை மந்திராமோ மாயமும் இல்லை, நாம் நம் அன்றாட வாழ்கையில், தினம் தோறும், வீதியெங்கும் கேட்கும் ஒரு தீர்த்த ஒலி தான். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஒலி நம் காதுகளில் விழுந்தவுடனே, அதை நம்மால் சரியாக என்னவென்று உணர முடியாது, அப்படியே முயன்றாலும், வெகு சிறிய நேரத்திற்கு மட்டும் தான் கேட்கும்.

சரி , இந்த "White noice" கும் நம் கதைக்கும் என்ன தொடர்பு என்றால், இப்பொழுது ஊகித்து இருப்பீர்கள். நம் கதையின் மிக முக்கிய பாத்திரமான பாண்டி, என்பவனின் அநாகரிகமான செயலை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சிறுமியின் ஆத்மா, அவனிடம் சிறிது உறவாட நினைத்தது. ஒவ்வருமுறை அந்த ஆத்மா , பாண்டி நடுமுதலைக்குளத்தைக் கடக்கும் பொழுது அவனிடம் எதோ ஒன்றை பரிமாற நினைத்து , முடியமால் போய், இறுதியில் மிகவும் வலுவடைந்து , அந்த கோரச்சம்பவதில் பாண்டியின் மொத்த குடும்பத்தையும் பலி தீர்த்து விட்டது.

இதற்கு இன்னொரு சான்று( உண்மை சம்பவம்) என்னவென்றால், ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நாற்பது வயதான பெண் ஒருத்தி , தாஜ்மஹாலுக்கு எதார்த்தமாக சென்ற பொழுது, ஒரு வகையான ஒலி தாக்கி , தன் பூர்வ ஜென்ம நினைவுகள் வந்து விட்டதாகவும், தாம் தான் மும்தாஜ் எனவும், ஷாஜஹான் தன் கணவர் என்றும் கூறினாள் . இது ஏதோ குரளி வித்தை போலத் தெரிந்தாலும், உண்மையில் அந்த பெண்மணி தன் பூர்விக உடமைகள் பற்றியும், நிலபுலன்கள் பற்றி அக்கு அக்காக சொல்கிறார். இது எப்படி சாத்தியம், எப்படி நிகழ வாய்ப்புண்டு?.சற்று நம் வயிற்றில் புளியைக்கரைக்கும் சேதிதான்.

நாமும் என்றாவது ஒரு நாள், நம் நினைவுகள் விட்டு வைத்திருக்கும் மர்மங்களை அறிய முற்படுவோம்.

நம் தேடல் தொடரும். விழிகளே விழித்திரு

Monday, February 1, 2010

வணக்கம், வந்தனம்

வணக்கம்.
என் அலுவலகத்தில் பணி புரியும் ராஜேஷ் குமார் அவர்களின் " மூன்றாம் கோணம்" என்ற படிப்பினை பார்த்து நான் மிகவும் பரவச பட்டுள்ளேன். ஏன் நாமும் நமக்கு தெரிந்த,அறிந்த சில பல விஷயங்களை இந்த பரந்து விரிந்த உலகிற்கு பகிர்ந்து கொள்ளலாமே என்று , தற்பொழுது இந்த இலக்கிய சேவையை தொடரலானேன். என் படைப்புகளை படித்து விட்டு ஏதேனும் பிழை இருக்கும் பட்சத்தில் தயவு செய்து தக்க பதில் கூறுங்கள்.

இப்படிக்கு
தன் தேடுதல் வேட்டையை நோக்கி
மகேஷ் SR