ஒரு அழகிய வெள்ளி குவளையில் மஞ்சள் நிற சர்க்கரை பாகில், உப்பென வெடைத்திருக்கும் 'ரசமலாய்' போல, அகண்ட விரிந்த விண்வெளியில், வெண்ணிறம் பாதியும், பொன் நிறம் பாதியும் கொண்டு, அனுதினமும் ஆதவன் காதலிக்கும் "நிலவு" , தன் மேல் விழுந்த ஒளிக் கதிர்களை பூமியின் மேல் பொழிந்து கொண்டிருந்தது .கால தேவனின் கணக்குப்படி , அது அந்தி வரும் நேரம். மருதைக்கும் தேனிக்கும் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஜப்பானிய நிறுவனத்தின் நாலு சக்கர ஊர்தியானது, தன இஷ்டத்திற்கு உருண்டு ஓடியது.
அந்த ஊர்தியின் உள்ளே , ஒரு பலத்த குரல் கேட்டது, அது மிகவும் எச்சரிக்கையாகவும் இருந்தது. " நான் சொன்னா தயவு செய்து கேள், இந்த ஊர்தியை ஓட்டுவது என்றால் அது அவ்வளவு சுலபம் அல்ல , மிகவும் ஆபத்தும், கடினமானதும் கூட" என்று முத்துபாண்டி தன் துணைவியாளிடம் கூறலானான். அவனது அந்த கூற்று சற்றே பொருத்தமானதாகவும் இருந்துதது , ஏனெனில் அவனுடைய மனைவி சங்கரி இந்த ஊர்தியில் இரண்டாம் முறை பயணிக்கலானாள். தன் அன்பான மனைவி மிகவும் மன்றாடி கேட்டுக்கொண்டதால் முத்துபாண்டியால் மறுக்க முடியவில்லை, சரி ஆனது ஆகட்டும் எது நேர்ந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தன் உள்மனதோடு சமாதானம் செய்து கொண்டான். அந்த ஊர்தி மருதையை தாண்டி சுமார் முற்பது மைல் கல் தூரம் தாண்டி இருக்கும் வேளையில் "நடுமுதலைக்குளம் உங்களை அன்போடு வரவேற்கிறது" என்ற அறிவிப்பு பலகை , தன் பல்லை இளித்துக் கொண்டிருந்தது . " அப்பா அது என்ன பேரு, நடுமுதலைக்குளம் , அதற்க்கு என்ன அர்த்தம்" என்று தன் அப்பாவிடம் கேட்டாள், ஐந்து வயதான பாண்டியின் மகள் அனிதா. அது ஒன்றும் இல்லையம்மா, முதலைகள் நிறைந்த குளம் என்றும், நீண்ட ஆயுட்களை கொண்ட சான்றோர் வாழும் இடம் என்றும் பாண்டி விளக்கினான்.
சற்றே தாமதமாக முன்னேறிய ஊர்தி, திடீரென விரைவு படலத்திற்கு மாற்றலானது. சங்கரியும் எதிரே பளீரென வெளிப்பட்ட பலவகை ஊர்தியின் ஒளிகலால் ஓட்ட முயன்று சிறிது பதற்றாமானாள். ஏனோ தெரியவில்லை அன்று வானம் சற்று மிகவும் பளிச்செனவே இருந்தது. நடுமுதலைக்குளம் கிராமத்தை ஊடுருவி சென்றது அந்த ஊர்தி. நேரத்துக்கு வீட்டுக்கு போய் சேர வேண்டும் என , பாண்டியின் தந்தை சொல்,கோயில் மணியென சிலீர் சிலீரென பாண்டியின் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ததினாலும் ,மிக்க அசதிக்கு உள்ளாகிய அனிதா அறவே உறங்கி விட்டாள். சிறுமி என்றதால் என்னவோ ,அவள் ஊர்தியின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு , இருக்கை காப்பான் கூட அணியாமல் கண்ணயர்ந்தாள்.அந்த கிராமத்தின் காவல் தெய்வமான முனியாண்டி கோவிலை தாண்டிய அரை மைல்கல் தூரத்தில்,சற்றும் எதிபாராத விதமாக பாண்டியின் உள்நாக்கில் நன்கு ஊறவைத்த புளியையும் பூண்டையும் ஒன்றாக அரைத்த கலவை போன்று ஒன்று அவன் பற்களில் படர்வது உணரலானான். அடுத்த விநாடி அவன் காதுகள் தன் அன்றாட செயல்களை இழக்க துவங்கியது. ஏனோ தன் மனைவியின் கூக்குரலும், கரை புரண்டோடும் ஊர்தியின் இரைச்சலும் அவனுக்கு கேட்கவே இல்லை. மாற்றாக அவன் அது வரை கேட்டிராத ஒரு ஒலி ,கழுதைப் புலியின் பற்களை போன்ற கூர்மையான அந்த ஒலி,அவன் காதை கிழித்தது.அது மிகவும் தொடர்ச்சியாகவும்,கேட்பதற்கு கடுமையாகவும், சிறு மூளையை இரண்டாக பிளக்கும் அளவுக்கு இருந்தது.
"என்னங்க,ஒன்றும் பேசாமல் உள்ளீர்,என்னவாயிற்று உங்களுக்கு" என்றவாறே கேள்விகளை மென்மேலும் பதற்றத்துடன் அடுக்கினாள். பத்து நிமிடங்கள், பத்து படபடப்பான நிமிடங்கள், பாண்டிக்கு எதோ முப்பத்து முக்கோடி உலகங்களையும் தாண்டி சென்று விட்டதாக ஒரு பிரமை. தன் சுயநினைவை எட்டியதற்கு சான்றாக ஓவென அலறினான். இதை அதிர்ச்சியுற கண்ட சங்கரி, ஊர்தியின் கடிவாளத்தை இயக்க மறந்து, ஊர்தியின் மொத்த கட்டுபாட்டையும் இழக்க நேர்ந்தாள், அதுவே அவள் கடைசியாக உள்வாங்கிய காற்றாக அமைந்தது.
இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு, இதே தேசிய நெடுஞ்சாலையில் , சுமார் இதே நேர கட்டத்தில், அதே ஜப்பானிய நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனம் போய் கொண்டிருந்தது. அந்த வாகனம் சரியாக அந்த ஊர் முனியாண்டி கோவிலை தாண்டிய பத்து மைல் கல் தூரத்தில், ஒரு ஆடு மேய்க்கும் சிறுமி தன் கிடையைச் சேர்ந்த ஆடுகளோடு , அந்த நெடுந்த சாலையை கடக்க முயன்றாள். அவ்வாறு கடக்க முயன்ற போது , அவள் கையின் அகப்பில் இருந்த பச்சிளம் ஆட்டுக்குட்டி , தன் பின்னங்காலுக்கு பிடரி மற்றும் அல்ல, தாவிக் குதித்தோட தெம்பும் வந்து விட்டது என எண்ணி துள்ளி குதித்தது. அப்பொழுது சாலையில் சரமாரியாக வந்த முத்துபாண்டியின் வாகனத்தின் முன் சக்கரங்களின் இடையே சிக்கி, ரத்த நாணங்கள் பீரிட்டு , தலை சிதறி, மூளையானது அச்சக்கரத்தின் மேல் ஒரு படிமாக ஒட்டி கொள்ள , அந்த சம்பவம் ஒரே களேபரம் ஆகியது.
சிறிதளவும் தன் வாழ்வில் இப்படி ஒரு கோரக்காட்சியை கண்டிராத அந்த சிறுமி, கண்கள் உள்வாங்கி மயங்கி விழுந்தாள். பொதுவாக இந்த சம்பவத்தை ஆராய்ந்தால், இதில் தவறு யாரிடமும் இல்லை. ஆனால் தன் வாழ்வில் ஒரு தரம்தாழ்ந்த செயலை இனிமேலும் செய்திராத வகையில், பாண்டி முயல எத்தனித்தான். தன் வாகனத்தில் வைத்திருந்த குவளை நீரை எடுத்து வாகனத்தின் முற்பகுதியை சுத்தம் செய்யலானான். இச்சம்பவம் நடந்த இடம் அந்த கிராமத்தை விட்டு தள்ளி உள்ளதால் , அருகில் ஜன நடமாட்டம் சிறிது குறைவே. தன் வாகனத்தை கழுவ நேரிட்ட பாண்டிக்கு , அந்த சிறுமி மயங்கி விழுந்ததை கவனிக்கவில்லை, மாறாக தன் புத்தம் புது வாகனம், எடுத்து வந்த முதல் நாளே ரத்தப்படலமாகி போனேதே என்று அவனுக்கு கோபமும் சீற்றமும். அவன் வாகனத்தில் மேல் விழுந்த சிறு சிறு நீர்த்துளிகள் , அந்த சிறுமியின் மேல் விழ, அவள் கண்கள் மெல்ல திறந்து. அவள் வளர்த்த ஆட்டுக்குட்டியின் இரங்கலை சிறிதும் எதிர்பாராத அவள், கதறிக்கதறி அழுவதற்குப் பதிலாக , சோழ நாட்டுச்சிற்பம் போல நின்று கொண்டிருந்தாள். மௌனத்தின் விளிம்பில் ஒரு ஜடம் போல காட்சி அளித்தாள். அவள் செல்லமாக வளர்த்த மூன்றே நாளன ஆட்டுக்குட்டி இறக்க நேர்ந்ததை அவளால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.
அந்த சிறுமியின் அதீத மாற்றத்தை , சிறிதும் அறிந்திராத பாண்டி, நேராக அந்த சிறுமியைப் பார்த்து , கடும் சொற்களால் சரமாரியாக கடிந்தான். மிகவும் தகாத வார்த்தைகளால் அந்த சிறுமியைச் சாடினான். முடிவாக அவன் அந்த சிறுமியை எச்சரித்தான், " அடுத்த தடவை நீ இப்படி வருவாயானால், உனக்கும் இதே கதி தான், உன் மூளையும் சிதறி விடும் என்று, அகவை அறியாது மூர்க்கமாகச் சாடினான். அந்த கோரக்கொலையை தாண்டி, பாண்டி கடிந்ததையும் தாண்டி , ஏனோ எதையும் கேட்டு கொள்ளாதவாறு , தன் வீட்டை நோக்கி பயண முற்பட்டாள். அந்த சிறுமி சகஜமான நிலையில் இருந்து , ஆழ்மனநிலை மையத்தை அடையலானால். இந்த நிலையை வேறு யாரேனும் மேற்கொண்டால், மீண்டும் பழைய நிலையை அடைய ஒரு சில நிமிடங்களோ, இல்லை நொடிகளோ போதும் , ஆனால் அந்த சிறுமி மீண்டும் தன் இயல்பு நிலையை இறுதி வரைக்கும் அடையவே இல்லை. ஏனெனில் அந்த துக்க நிகழிச்சியை மீள முடியாமல் , ஊன் உறக்கமின்றி , உடல் காய்ச்சலாகி , பேச முடியாமல், இரண்டு நாளில் இறக்கவும் நேரிட்டாள். அந்த சிறுமியின் மரணம் பலருக்கும் கேள்விகளை எழுப்பியது. உண்மையில் பாண்டியின் நோக்கமில்லாத அந்த கொலை மற்றும் அவன் சாடிய கடுஞ்சொற்கள் , இவை இரண்டும் தான் அந்த சிறுமி மரணத்தைத் தழுவ நேரிட்டது.
பத்து நிமிடங்களுக்கு பிறகு, தன் இயல்பு நிலையை அடைந்த பாண்டி, சங்கரியின் வாகன கட்டுபாடின்மையை பார்த்து அதிர்சிச்சயுற்றான். " சங்கரி பிரேக் போடு , பிரேக் போடு" என்று கதறலானான். ஏனனெனில் தன் கணவனின் பேச்சை சுமார் பத்து நிமிடங்கள் கேட்க முடியாது போனதால் பதற்றமுற்றாள் சங்கரி. அதன் காராணமாக , எதிரே வந்து கொண்டிருந்த நீர் இறைக்கும் லாரி மீது நேருக்கு நேர் மோத முற்பட்டாள். பாண்டியோ தன் நினைவுக்கு வந்த நொடியில், எதிரே வந்த லாரி மீது மோதி, இறுதியில் வானகம் சிதைந்தது, அவன் குடும்பமும் சிதைந்தது.
சரி இப்பொழுது நாம் இரண்டு கோரச்சம்பவங்களை பார்க்க நேர்ந்தோம். இவ்விரு சம்பவங்களுக்கு இடையே என்ன ஒரு ஒற்றுமை என்று பார்த்தல், அது மிகவும் மிரளவைக்கும் விஷயமாக உள்ளது. இதற்க்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் ஒன்று உள்ளது . அதாவது இந்த பூவுலகையும் , பூதவுடலையும் விட்டு துர்பாக்கியமாகப் பிரிந்த சென்ற ஆத்மாக்கள் , தாம் விட்டுச்சென்ற நினைவுகளையோ அல்லது நபர்களையோ மீண்டும் உறவாட வேண்டும் என்று ஆசை படும். இப்படி அலையும் ஆத்மாக்களுக்கு, எப்படி அது சாத்தியம் என்று கூர்ந்து கவனித்தால், பஞ்சபூதங்களே பதில். அதில் முதலோங்கி இருப்பது ஒலி. ஆங்கிலத்தில் இதற்கு "White noice" என்று பொருள் படும். இப்படி தானோங்கி திரியும் ஆத்மாகளிடம் தொடர்பு கொள்ள மனிதன் கண்டுபிடித்து தான் இந்த "White noice" அணுகுமுறை.
இந்த "White noice" என்பது , ஏதும் நுட்பமான கணக்கோ, இல்லை மந்திராமோ மாயமும் இல்லை, நாம் நம் அன்றாட வாழ்கையில், தினம் தோறும், வீதியெங்கும் கேட்கும் ஒரு தீர்த்த ஒலி தான். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஒலி நம் காதுகளில் விழுந்தவுடனே, அதை நம்மால் சரியாக என்னவென்று உணர முடியாது, அப்படியே முயன்றாலும், வெகு சிறிய நேரத்திற்கு மட்டும் தான் கேட்கும்.
சரி , இந்த "White noice" கும் நம் கதைக்கும் என்ன தொடர்பு என்றால், இப்பொழுது ஊகித்து இருப்பீர்கள். நம் கதையின் மிக முக்கிய பாத்திரமான பாண்டி, என்பவனின் அநாகரிகமான செயலை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சிறுமியின் ஆத்மா, அவனிடம் சிறிது உறவாட நினைத்தது. ஒவ்வருமுறை அந்த ஆத்மா , பாண்டி நடுமுதலைக்குளத்தைக் கடக்கும் பொழுது அவனிடம் எதோ ஒன்றை பரிமாற நினைத்து , முடியமால் போய், இறுதியில் மிகவும் வலுவடைந்து , அந்த கோரச்சம்பவதில் பாண்டியின் மொத்த குடும்பத்தையும் பலி தீர்த்து விட்டது.
இதற்கு இன்னொரு சான்று( உண்மை சம்பவம்) என்னவென்றால், ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நாற்பது வயதான பெண் ஒருத்தி , தாஜ்மஹாலுக்கு எதார்த்தமாக சென்ற பொழுது, ஒரு வகையான ஒலி தாக்கி , தன் பூர்வ ஜென்ம நினைவுகள் வந்து விட்டதாகவும், தாம் தான் மும்தாஜ் எனவும், ஷாஜஹான் தன் கணவர் என்றும் கூறினாள் . இது ஏதோ குரளி வித்தை போலத் தெரிந்தாலும், உண்மையில் அந்த பெண்மணி தன் பூர்விக உடமைகள் பற்றியும், நிலபுலன்கள் பற்றி அக்கு அக்காக சொல்கிறார். இது எப்படி சாத்தியம், எப்படி நிகழ வாய்ப்புண்டு?.சற்று நம் வயிற்றில் புளியைக்கரைக்கும் சேதிதான்.
நாமும் என்றாவது ஒரு நாள், நம் நினைவுகள் விட்டு வைத்திருக்கும் மர்மங்களை அறிய முற்படுவோம்.
நம் தேடல் தொடரும். விழிகளே விழித்திரு
கேப்டன் கலக்கிடீங்க.. முதன் முதலில் தங்களின் இந்த முயற்சியே மிகப்பெரும் பாராட்டுக்குரியது.வாசிக்கும் பழக்கமே அழிந்துவரும் இந்த சூழ்நிலையில் எழுத்து வானின் விடிவெள்ளியாய் உங்கள் வரவு.ஒரு இந்திரா சௌந்தரராஜன் நாவலின் கரு உங்கள் கதையில் உள்ளது. யாரும் அவ்வளவாகத்தொடாத மர்மம் என்னும் வகையினைத் ("genre" ) தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இன்னும் பலப் பல மர்ம முடிச்சுக்களையும் புதிய அமானுஷ்ய விஷயங்களையும் ஆழமான ரகசியங்களையும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்..!
ReplyDeleteஅப்புறம் இன்னும் ஒரு விஷயம், ஒரு நிலவை வர்ணிக்கக் கூட நீங்கள் குப்பென உப்பலாகப் புடைத்திருக்கும் ரசமலாயை உவமையாக்கியிருப்பது உணவின் மேலுள்ள தங்கள் பற்றினைக் காட்டுகிறது. " உன் கழுத்து இருக்கே கழுத்து அது நல்ல பித்தளச்செம்ப கவுத்தி வச்சது போல கும்முன்னு இருக்கு" என்று வடிவேலு சொல்வது போல இருக்கிறது தங்கள் உவமை. வித்தியாசமான சிந்தனை ...
ReplyDeleteMagesh,
ReplyDeleteVithayasamannana sambavangalai pattriya ungaludaya mudal thedal arumai(konjam payamavum irunthuchu padikkirappa)...menmelum todara valthukkal.
Regards,
Dheiva.
dei...good one... nalla iruku...continue the good job..
ReplyDeletemagesh very very intresting to read..i will share it to all da..
ReplyDelete