Monday, June 7, 2010

மூன்றாவது அணி

நம்மை சுற்றியுள்ள இயற்கை, நம்மை எப்பொழுதும் வியக்க வைத்துக்  கொண்டே இருக்கிறது. இயற்கை என்பது, கோடான கோடி வருடங்களாக, பரினாம  வளர்ச்சியின் கோட்பாடுகளுக்கு இணங்கவே இருந்துள்ளது. நாம் வாழும் உலகமானது ஒவ்வரு முக்கிய அல்லது வீரிய கட்டத்தில் அழிந்தும், உருவாகியும் , பல அறிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது . மனிதன் , இந்த படர்ந்த பூமியில் நடமாடிய  காலம் முதல் , மனிதனுக்கே உண்டான பல பரினாம  வளர்ச்சியை நாம் அறிவோம். எடுத்துக்கட்டாக    , மனிதன், மித்தப்  பாலூட்டிகள் போல் , முக்கியமாக குருங்கினை போல் நாலு கால்களால் நடந்தான், பிறகு இரண்டு கால்களால் , அக்குருங்கினை போல் குனிந்தே நடந்தான். இறுதியாக ,நேராக நிமிர்ந்து நடக்கப்  பழகி கொண்டான், இதுவே பரினாம வளர்ச்சியின் ஒரு சான்று.


நமது இயற்கையின் இப்படிப்பட்ட விந்தையான செயலைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப்  போகிறோம். ஆண், பெண் , குறி, சேர்க்கை, இச்சை, காமம், காதல் போன்றவை   நாம் தினந்தோறும்  கேட்க்கும் சராசரியான சொற்கள். ஆண் என்பவன், திடமானவன், வீரன்,  உழைப்பாளி, ஆளும் திறன் கொண்டவன், முதன்மைக்குரியவன்  , என்றெல்லாம் நம் முன்னோர்கள் வகுத்த வைத்த இலகணங்கள். இப்படியாக கூறப்பட்ட ஆணுக்கு, நேர் எதிராக , பெண் என்பவள் மென்மை, அழகு, வசீகரம், சாந்தம், பொறுப்பு, பேணுதல் போன்றவற்றை கொண்டவள் என அர்த்தம் கொன்றனர்.


சரி இவ்விரு அணிகளுக்கும் உண்டான இலக்கணங்களை பார்த்தாகி விட்டது. இதற்கு அப்பால், இயற்கையின் பரிணாம வளர்ச்சியால் உண்டான மூன்றாவது அணியும் உள்ளது. நான் இனிமேல் , இக்கட்டுரையில் யாரைக்  குறிப்பிட்டு விளக்கப் போகிறேன் என்று நீங்கள் ஊகித்து இருப்பீர்கள் . அது தான் இல்லை , நீங்கள் நினைத்தவாறு நான் " மூன்றாவது அணி" என கூற முற்பட்டது "திருநங்கைகள்" பற்றி அல்ல.  உங்கள் வியப்பிற்கு , இதோ தக்க விளக்கங்கள்.


அந்த மூன்றாவது அணி , சற்றே வியப்பானது தான்   ஆங்கிலத்தில்  இதற்கு " THIRD SEX"  என்று சொல்வார்கள். இது இயற்கையின் பரிசோ , இல்லை சாபமோ , இவர்கள் சற்று தன்னிச்சையாகவே உள்ளனர். பிறப்பினால் ஆணாகவும் , தேக தோற்றத்தில் பெண்ணாகவும் , அல்லது இதற்கு நேர் மாறாகவும்  ( VICE VERSA) இருப்பர். சரி திருநங்கைகளுக்கும் , இம்மூன்றாம் அணிக்கும் என்ன மாதிரியான வேறுபாடுகள் இருக்கப்   போகிறது என்று நீங்கள் கேட்கலாம். இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் , அடுத்து வர போகிற சிறிய பத்தியைக்  கடந்து , அடுத்த பத்தியைப்  படிக்க முற்படவும். 






திருநங்கைகள் என்பவர்கள் , பிறப்பால் ஆணாகப்  பிறந்து, ஆண்களுக்கேயான பிறப்பு உறுப்புகளோடு இருந்து , பெண்களுக்குகான குணங்கள்  கொண்டவர்களாகவோ, அல்லது நேர்மாறகவோ  இருப்பர். தங்கள் உடலில் உள்ள உறுப்புகளுக்கு முக்கியத்துவம் காட்டாமல் , எதிர்பாலர்களுக்கான உணர்சிகளுக்கு மட்டும் பீரிட்டு வெளிவரும்.திருநங்கைகளில் ஆணும் , பெண்ணும் உண்டு. ஆணாகிய திருநங்கைகள் , தம்மை பெண்ணாக பாவித்துக் கொண்டு , பெண் வேடமிட்டும் , பெண்போன்று  சேஷ்டைகள் செய்தும் வாழ்கையை மேற்கொள்வர். இவர்கள் , நமது சமுதாயத்தில் போற்றியும், தூற்றியும் ஆங்காங்கே வாழ்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் தெய்வீக சக்தி கொண்டவர்கள் என கருதப்படுகிறார்கள்.


மூன்றாவது அணியான இந்த இனம் , பெண்ணும் அல்லாது, ஆணும் அல்லாது , ஒரு வகையான அறிய இனம். இவர்கள் இயற்கையால் உருவாக்கப்பட்டு பேணி பராமரிக்கப்  படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மிகவும், ரகசியமாகவே வாழ்ந்து வருகின்றனர். மருத்துவரீதியாக விளக்கம் கூறினால், பிறப்பால் உயிர் அணுவின் ஆக்கத்தில் ஆணாகவும் ,   பிறந்த பின் , பெண் உருப்புகளோடும் , அல்லது நேர்மாரகவும், அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட கலவையில் இருப்பர். இவர்களால் நம்மை போன்று குடும்ப வாழ்கையில் ஈடுபட்டு , குழந்தை பேரு காண முடியும். கடந்த சில நூற்றாண்டுகளாக , மருத்துவ குறிப்பேடுகளில் , இவ்வாறு கூறப்படும் மூன்றாவது அணி பிறத்தலும், பிறந்தவுடன் இறத்தலும், இவ்வாறு பிறந்தவுடன் , சில பல அறுவை சிகிச்சைகள் செய்து , தம் ஆசைக்கு  இணங்க , தம்மை இனம் மாற்றியும்  கொள்கின்றனர்.   


இந்த இயற்கையின் திருவிளையாடல், மனிதர்களுக்கு மட்டும் அல்ல, நம்மைப்  போன்று பிற பாலூட்டிகளுக்கும் தகும். சிவப்பு மான்( RED DEER  -2  ஆண், 1 பெண்) ,  ப்ளைன் பின் மீன் ( PLAIN FIN - 1  பெண், 3 ஆண்) , பறவைகளில்  குருவி இனம் கூட, இப்படி பட்ட பாகுபாடுகள் காணப்படுகின்றன. நூற்றுக்கும்  மேற்பட்ட மிருகங்களிடையே காணப்படுகிறது . இயற்கையின்  இந்த பரிணாம வளர்ச்சியை பற்றி ஆராயும் அறிஞர்கள் கூட இச்செய்தியை வியப்பாக கருதுகின்றனர்.




இப்படிபட்ட மகத்துவமான இனத்தினை ,நம் இந்திய வரலாற்றில் கூட முக்கிய இடம் வகுக்கின்றன. நம் நாட்டிலுள்ள பழமையான  மதங்களான இந்து, இஸ்லாம், ஜெயின்,  போன்றவற்றில் கூட, மூன்றாவது அணி பற்றி குறிபிடப்பட்டுள்ளது. இன்னும் துல்லியமாக கூறவேண்டும் என்றால் , 3500 வருடத்திற்கு முன்பே , சில குறிப் பேடுகளில் உள்ளது என வரலாற்றுச்  சான்றுகள் உள்ளது. இது போதாது என, நாம் நாட்டின் வரலாற்று காப்பியங்களான, மகாபாரத்திலும், இராமாயணத்திலும் கூட சுட்டி காட்டப்படுகிறது . புத்த மதத்தின் குருவான, புத்தரே தம் போதங்களையும் , வாழ்க்கை நெறிகளையும் வாய்வழியாக , இந்த மூன்றாவது அணிக்கு சொன்னார் என வரலாறு கூறுகிறது. உலகத்தின்   மற்ற பகுதிகளான, எகிப்பது , சைபீரியா, அமெரிக்க, பாகிஸ்தான், தாய்லாந்த், போன்ற இடங்களிலுள்ள வரலற்று குறிபேடுகள் , மூன்றாவது அணி பற்றி தெளிவாக கூறகிறது. 






நம் இன்றைய புதிய இந்தியாவில் , மூன்றாவது அணியின் மேம்பாட்டிற்காக சில  நிறுவனங்கள் போராடி வருகின்றன. இதில் முதல்மையானவை , " ஹிர்ஜா" என்ற அமைப்பு , இந்த அமைப்பு ,மூன்றாவது அணியின் உரிமைக்காகவும் , தேவைகளுக்காகவும் , அமைக்கப்பட்டு ,செயல்பட்டு வருகிறது. நம் இந்திய அரசாங்கமே , இவர்களுக்கு  பல சலுகைகளை ஒதுக்கி உள்ளது . எடுத்துக்காட்டாக , நம் நாட்டின் பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வோட்டு அட்டை போன்றவற்றில் கூட இவர்களின் பால் , "பிற" என குறிபிடப்பட்டுள்ளது.  


இப்படிப்பட்ட மனிதர்கள் , சில தருணங்களில் போற்றியும் , தூற்றியும் , வணங்கியும்  , ஒதுக்கியும் வருகிறது ,நமது சமுதாயம். இயற்கையின் படைப்பால் இப்படி  பிறப்பதற்கு, இவர்கள் ஏன் பொறுப்பு ஏற்க வேண்டும்.


Sources: http://en.wikipedia.org/wiki/Third_gender

8 comments:

  1. அன்புள்ள கேப்டன், ஒரு புது வித தகவலோடு இம்முறை வந்திருக்கின்றீர்கள்,மிக்க ஆச்சரியமளித்த விஷயம் இது,
    இது பற்றி மேலும் தகவல்கள் புகைப்படங்கள் இருந்திருந்தால் என்போன்றவர்களுக்கு எளிமையாகப் புரியும். அப்புறம் எழுத்துப் பிழைகளை தயவு செய்து தவிர்க்கவும், மேலும் உங்களிடமிருந்து பல அரிய படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. Looks like very proficient blogger like Rajesh...Topic started was good and usefull but expert more information on the Topic...The style you presented was Extrardinary but better if you make a own style..Go ahead...Experting lot more topics from you soon..

    ReplyDelete
  3. எனது அன்பு நண்பர்களுக்கு,

    தங்களது அன்பு கோரிக்கைகளை ஏற்று , என் கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகளை நீக்கியும், சில பல படங்களை நிரப்பியும் உள்ளேன். இதை நீங்கள் மீண்டும் ஒரு முறை என் கட்டுரையை படித்து விட்டு , உங்கள் விமர்சனங்களை கூறுங்கள்.

    நன்றி,
    மகேஷ் S R

    ReplyDelete
  4. அன்புள்ள கேப்டன் .. இம்முறை தாங்கள் அளித்த வலைத்தள முகவரிகள் மூன்றாம் பாலினம் குறித்து அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. எனினும் இந்திய துணைக்கண்டப் பகுதிகளில் ஹிஜ்ரா என்றழைக்கப் படுபவர்கள் திருநங்கைகளே. தங்களது மேலதிக விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். ஏதாவது முக்கியமான சாதனை படைத்த மூன்றாம் பாலினத்தவர் உள்ளனரா.?

    ReplyDelete
  5. //Looks like very proficient blogger like Rajesh//
    ஹலோ யாருப்பா அது ஜெயா ? என்ன வச்சு நீங்க ஏதும் காமெடி பண்ணலியே? என்னைத்தான் இப்படி சொல்றீங்களா? ஒருவேளை அப்படின்னா உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க .. நானொரு கத்துக்குட்டி அவ்ளோதான்..

    ReplyDelete
  6. அன்புள்ள ராஜி,
    தாங்கள் குறிப்பிட்டது போல ஹிஜ்ரா என்றழைக்கப் படுபவர்கள் திருநங்கைகள் என்று பலரும் கூறுவது ஒரு வகையில் உண்மையின் தழுவல் , ஆனால் கூர்ந்து ஆராய்கையில் , இவர்கள் திருநங்கைகள் அல்ல, மாற்றாக இவர்கள், மூன்றாவது அணியே. நம்முடைய சமூகம் இவர்களை திருநங்கைகளாகவே முத்திரை குத்தி விட்டனர். மருத்துவ ரீதியாக பார்த்தல், இவர்கள் பிறப்பால், பிரப்பனுவால், மூன்றாவது அணியே. இதற்கு எடுத்துக்காட்டாக , நான் என் பதிவில் குறிபிட்டுள்ள இணைய தளத்தின் முகவரியை பார்க்கவும்.

    Few lines quote from Wikipedia website:
    The Hijra[10] of India are probably the most well known and populous third sex type in the modern world — Mumbai-based community health organisation The Humsafar
    Trust estimates there are between 5 and 6 million hijras in India. In different areas they are known as Aravani/Aruvani or Jogappa. Often (somewhat misleadingly) called
    eunuchs in English, they may be born intersex or apparently male, dress in feminine clothes and generally see themselves as neither men nor women. Only eight percent
    of hijras visiting Humsafar clinics are nirwaan (castrated). Indian photographer Dayanita Singh writes about her friendship with a Hijra, Mona Ahmed, and their two
    different societies' beliefs about gender: "When I once asked her if she would like to go to Singapore for a sex change operation, she told me, 'You really do not understand.
    I am the third sex, not a man trying to be a woman. It is your society's problem that you only recognise two sexes.'"[11] Hijra social movements have campaigned for
    recognition as a third sex,[12] and in 2005, Indian passport application forms were updated with three gender options: M, F, and E (for male, female, and eunuch,
    respectively).[13] Some Indian languages such as Sanskrit have three gender options. In November 2009, India agreed to list eunuchs and transgender people as
    "others", distinct from males and females, in voting rolls and voter identity cards.[14]In addition to the feminine role of hijras, which is widespread across the subcontinent,
    a few occurrences of institutionalised "female masculinity" have been noted in modern India. Among the Gaddhi in the foothills of the Himalayas, some girls adopt a
    role as a sadhin, renouncing marriage, and dressing and working as men, but retaining female names and pronouns.[15] A late-nineteenth century anthropologist noted
    the existence of a similar role in Madras, that of the basivi.[16] However, historian Walter Penrose concludes that in both cases "their status is perhaps more
    'transgendered' than 'third-gendered.'"[17



    மேலும் உங்கள் கலந்துரையடளுக்காக காதிருக்கிறேன்.

    ReplyDelete
  7. Hello Jaya,
    Thanks for your comments, I like to know your profile, since i am not able to identify who you are, kindly let me know about you.

    Thanks in advance.

    ReplyDelete
  8. Hello Magesh,

    very Interesting information..

    adade ippadi onnu irukkannu acharyamai ennikondae...padikirathukulla..post mudinjuduthuuu...niraya eluthunga boss..


    (Nanga romba late aaaaa padichalum..latest aa comment poduvom)

    ReplyDelete